பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
ஈரோடு: ஈரோடு ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று துவங்குகிறது. ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை, 6 மணிக்கு காவிரிக்கரையில் இருந்து, சுமை தூக்குவோர் சங்கம் மற்றும் பொதுமக்களின் தீர்த்தக்குட நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3 மணிக்கு சாவடித்துறையில் இருந்து அம்மன் அழைத்தல், 4 மணிக்கு, வேல் எடுத்து ஊர் சுற்றி வருதல், இரவு, 8 மணிக்குய வாண வேடிக்கையுடன் அம்மன் அழைப்பு நடக்கிறது. இரவு, 9 மணிக்கு குண்டம் திறப்பு நடக்கிறது. நாளை காலை, 5 மணிக்கு சாவடித்துறையில் இருந்து கரகம் எடுத்து வருதல் நடக்கிறது. தொடர்ந்து, குண்டம் இறங்குதல் நடக்கிறது. காலை, 9 மணிக்கு அம்மன் ஊர்வலம், மாவிளக்கு எடுத்தலும், காலை, 10 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. மாலை, 2 மணிக்கு அக்னி சட்டி எடுத்தலும், 3 மணிக்கு பெண்கள் அலகு குத்தி வருதலும், மாலை, 4 மணிக்கு பெரிய அலகு குத்தி மினிடோர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு ஆண்கள் கை அலகு குத்தி வருதல் நடக்கிறது. ஏப்ரல், 11ம் தேதி காலை, 6 மணி முதல், 12 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடக்கிறது. பகல், 1.30க்கு கம்பம்பிடுங்குதல், மஞ்சள் நீர் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடக்கிறது. ஆர்.என்.புதூர் பொதுமக்கள், விழாக்கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.