பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதகப்பாடி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் மயான பூஜை நடக்கிறது. அதிகப்பாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் சிம்ம பீடத்தில், இன்று இரவு, 8 மணியில் இருந்து, அதிகாலை 12 மணி வரையில் பிரத்தியங்கரா யாக பூஜையும், 12 மணி முதல், 12.30 மணி வரை மயான பூஜையும், அதிகாலை 12.30 மணிக்கு மேல் மூலவருக்கும், உற்சவ மூர்த்தி அம்மனுக்கும், நடராஜருக்கும், ஒன்பது விதமான மஹா அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, உற்சவ மூர்த்தி அம்மன் ஊஞ்சலில் எழுந்தருவி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சிம்ம பீட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.