Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடன்மா குதிரை! உறங்கும்முன் ஸ்ரீராமஜெயம் கூறிக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்படி தெரிந்தது இவருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
02:04

காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்திலுள்ள தெரு வழியாக நடந்து வந்தார். ஒரு வீட்டு வாசலில் பந்தல், தோரணம் என அமர்க்களப்பட்டது. அவ்வீட்டு சிறுவனுக்கு உபநபயனம் (பூணூல் சடங்கு). அந்த வீட்டின் முன் பெரியவர் நின்றார். வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, பாதத்தில் விழு ந்து ஆசி பெற்றனர்.பெரியவர், உபநயனம் செய்த பையனையும்,  அவனது பெற்றோரையும் முன்னால் வரும்படி அழைத்தார். உபநயனம் நடப்பதற்கு முந்தியநாள் தான், அந்தப் பையன் தன் அப்பாவிடம்,அப்பா! மகா பெரியவா நம்ம ஊருக்கு வந்திருக்கிறாரே! எனக்கு பூணூல் சடங்கு நடக்கிற விபரத்தை அவரிடம் சொன்னால், நம் வீட்டுக்கு வருவார் இல்லையா! என்று கேட்டான்.அதற்கு அப்பா,அந்த மகான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள், என்று சொல்லியிருந்தார்.ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், பெரியவரே யாரும் அழைக்காமல் அங்கு வந்து நின்று, தங்களை முன்னால் வரச்சொல்கிறார் என்றால், அவர்களுக்கு எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்! பெரியவர் அந்த சிறுவனை ஆசிர்வதித்தார். பின், அடுத்த தெருவுக்கு சென்றார். அவ்வீட்டில், ஒரு சிறுவனும், அவனது பாட்டியும் இருந்தனர். பெரியவரைக் கண்டதும் நமஸ்கரித்தனர். பெரியவர் மூதாட்டியிடம்,  நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவரர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்? என்றார். பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் செய்தல்) எங்களிடம்  வசதியில்லை, அதனால்,  நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன், என்றார் மூதாட்டி. பெரியவர் சிரித்தார். பார்த்தாயா! இப்போது நான் வந்து விட்டேன், என்ன செய்யப் போறே! என்றவர், பையனை அருகில் அழைத்து, என்னைத் தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா  என்று சந்தேகப்பட்டாய் அல்லவா! இப்போ,  நான்உன் வீட்டுக்குள்ளேயே வரப்போறேன். நீஅனுமதிப்பாயா?  என்றவர், வீட்டுக்குள்  வந்து  சிறுவனையும், மூதாட்டியையும்  ஆசிர்வதித்தார். எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மகிமைமிக்கவராக இருந்தார் பெரியவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar