Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல் அட்டிச்செல்லும் விழா! திருநீரில் சொர்க்கமே இருக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவமயமே! எங்கும் சிவமயமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
02:04

*சிவனுக்குரிய விழாவில் முக்கியமானது சிவராத்திரி. இந்த நாளில் தான் சிவபார்வதி திருமணம் நடந்ததாகச் சொல்வர்.
*சிவராத்திரியன்று மனஒருமையுடன் பக்தியில் ஈடுபட்டால் பாவம் நீங்கும். இந்த பிறவியில் எல்லா நன்மையும் சேர்வதோடு முடிந்தபின் சிவலோகத்தில் வாழும் பாக்கியம் உண்டாகும்.
*சிவனுக்குரிய பாடல்களான சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடுவது நல்லது.
*பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம உச்சரிப்பதும் அவசியம். இந்த மந்திர சக்தியால் பவபயத்தில் இருந்து (பிறவியில் இருந்து) நாம் விடுபட முடியும்.
*கோயில்களில் ராத்திரி முழுவதும் பக்தர்கள் ஒன்றுகூடி கண்விழிப்பர். பால், தயிர், தேன், பன்னீர் போன்றவற்றால் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அபிஷேகம் நடத்துவர்.
*மகாபாரதத்தில் சாந்திபர்வத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்தபடி தர்மத்தை உபதேசிக்கிறார். அதில் மன்னன் சித்திரபானு சிவராத்திரி விரதமிருந்த செய்தி இடம்பெற்றுள்ளது.
*மனிதனைப் பாதிக்கும் குணங்களான ரஜோ என்னும் விருப்பு வெறுப்பு, தமோ என்னும் சோம்பல் ஆகிய இரண்டையும் வெல்லுவதற்காகவே சிவராத்திரிநாளில் பக்தர்கள் கண்விழிக்கின்றனர்.
*சிவன் ஒளிவடிவம் கொண்டவராக இருக்கிறார். தவத்தீயால் ஜொலிக்கும் அவரை குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து மகிழ்விக்கின்றனர்.
*சிவனை அழிக்கும் கடவுள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் பிரியமுள்ள தாய் தந்தையாகவும், உற்ற நண்பனாகவும் இருக்கிறார். இந்த உலகத்தை உருவாக்கி நன்கு அமைத்த ஒப்பற்ற சிற்பி அவரே. அவர் ஒரு செயலும் செய்வதில்லை. ஆனால்,அவரின்றி ஓர் அணுவும் அசைவதில்லை.
*நல்லொழுக்கம், மன அடக்கம், இரக்கம், தியாகம், சேவை, தியானம் போன்ற நற்குணங்களின் இருப்பிடமாக வாழுங்கள். அப்போது சிவன் உள்ளத்தில் உறைந்திருப்பார்.
*எப்போதும் சிவசிந்தனையில் இருங்கள். சுயநலமில்லாமல் அனைவர் மீதும் அன்பு காட்டுங்கள். சேவையில் மகிழ்ச்சி காணுங்கள். இதுவே தெய்வீக வாழ்க்கை.
*உலக ஆசைகளைத் துறந்து சிவபக்தியில் திளைப்பவனே மேலானவன். அவனது பாதத் தூளிகளால் இந்த உலகமே புனிதமடைகிறது.
*எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். நம் அந்தரங்க எண்ணத்தையும் ஈசன் அறிவார். பரிசுத்தம் என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருப்பதே உயர்ந்தது.
*வழிபாட்டின் போது, என் இதயதாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்துகொண்டு வரப்பட்ட புனிதநீரை, என் தூய மனத்தால் உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இப்பிறவியில் எனக்கு நல்வாழ்வு தந்தருள்வீராக! என்று வேண்டுங்கள்
*சிவபெருமானே! நீரே என் உயிர். என் மனமே பார்வதி. பிராணனே உமக்கு சேவகன். என் உடலே நீர் குடியிருக்கும் வீடு. எனது அன்றாட செயல்களே உமது வழிபாடு. என் நடையே உம் கோயில் பிரதட்சணம். என் பேச்செல்லாம் உமக்கு செய்யும் அர்ச்சனை. இவ்விதமாக என்னை முழுவதுமாக உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்! என்று பிரார்த்தியுங்கள்.
-சிவானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar