கனவில் பாம்பைக் காண்பதால் தவறில்லை. பாம்பு விரட்டி வந்தால் பரிகாரம் செய்யலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு, பஞ்சமியன்று கருடாழ்வாருக்கு நெய்தீபம், செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம், பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம், திருப்பாம்புரம் அல்லது திருநாகேஸ்வரம் நாகநாதர் வழிபாடு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பரிகாரமாகச் செய்தால் போதும்.