பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
11:04
வாலாஜாபாத்: இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வாலாஜாபாத்தை அடுத்துள்ளது இளையனார்வேலூர். இங்கு, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, மலையன், மாகறன் என்ற, அசுரர்களை பாலசுப்பிரமணிய சுவாமி, வேல் கொண்டு அழித்ததுடன், அவ்வேல் பாய்ந்த இடத்தில், கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டிற்கான உற்சவம், இன்று காலை துவங்குகிறது. காலை 4:30 மணியிலிருந்து, 8:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெறும். இன்று முதல், 27ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.