உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்ச தீப திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனமும், 11 மணிக்கு ததியாராதனையும், மாலை 3 மணிக்கு பஜனை நடந்தது. மாலை 5 மணிக்கு லட்ச தீப திருவிழாவையொட்டி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரமும், வடமாலை சாற்றுதலும் நடந்தது. மாலை 6 மணிக்கு பெருமாள், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. அதற்கு முன்னதாக ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் விஜயராகவஅய்யங்கார், ஸ்ரீஆஞ்சநேயர் கைங்கர்ய சபா ஆகியோர் செய்திருந்தனர்.