திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை கடலூர் கைலாசநாத குருக்கள் துவக்கி வைத்தார். ஒளிவழிபாடு என்ற தலைப்பில் பொன்னம்பலம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், குருக்கள் அர்த்தநாரி, ரவி, கணக்கர் அசோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஏமப்பூர் ஓசூர் மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் நடந்த திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜையை மாநில இணை அமைப்பாளர் பொன்னையா துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஏழுமலை, நிர்வாகிகள் இளங்கோ, விஜயகுமார், அப்பு, ராஜ்மோகன், பழனி, அசோக்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.