கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் அரசாணைப்படி குத்துவிளக்கு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் செய்தனர். தாயார் மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. பூஜைக்கு பின் பெண்கள் சுமங்கலி தாம்பூலம் பரஸ்பரம் கொடுத்துக்கொண்டனர். தீப வழிபாட்டுக்குப்பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிக பட்டர் வழிபாட்டை செய்து வைத்தார். அறிவுசார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.