சட்டைநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியெற்றத்துடன் தொடங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 01:04
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை திருமுலைப்பால் விழா நடைபெறுகிறது. நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட் டைநாதர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு, அ ம்பாள் ஞானப்பால் வழங்கியதால் திருஞானசம்பந்தர் தனது 3வது வயதில் ÷ தாடுடைய செவியன் என்ற முதல் தேவார பாடினார் என்பது ஐதீகம். இதனை போற்றும் வகையில் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத் தில் 10 நாட்கள் நடைபெறும் பிம்மோற்சவத்தின் இரண்டாவது நாளன்று தி ருமுலைப்பால் திருவிழா நடைபெறுகிறது. இவ்வாண்டு பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு ரிஷப ல க்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீ சட்டைநாதர் தேவஸ்தான கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவர், கொடி மர வினாயகர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷே கம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதணை செய்யயப்பட்டு திருவிழா கொடியேற்றப்பட்டது. அப்போது ஏராளமான பக் தர்கள் நமச்சிவாய என கோஷமிட்டு மலர் தூவி வழிபட்டனர். இரண்டாம் நாளான நாளை மதியம் 1 மணிக்கு சைவ சமயத்தின் முக்கிய தி ருவிழாவான திருமுலைப்பால் திருவிழா தருமபுரம் ஆதினம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. திருமுலைப்பால் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் சிராப்பு செந்தில், சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் கோவில் ஊ ழியர்கள் செய்து வருகின்றனர்.