முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா: விழாக்கோலம் பூண்டது மதுரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2013 10:04
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,25 காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். சித்திரை திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்ட மக்கள் அழகர்கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்., 23ல் நடக்கிறது. ஏப்.,25ல் காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்., 27ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.