பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், வரும் 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள் ளது. இக்கோவிலில், ஆதிகேசவப்பெருமாள், ராமானுஜர், ராமர், வேணுகோபால், எதிராஜநாதவள்ளி தாயார், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், 20 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிக்கு, தொடர்ந்து விழா நடத்தப் படுவது வழக்கம். வரும் 24ம் தேதி, காலை 9:15 மணி முதல், 10:45 மணிக்குள்ளாக, துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மாலை, சிம்ம வாகனத்தில், ஆதிகேசவப்பெருமாள் எழுந் தருளி வீதி உலா வருவார். முதல் 10 நாட்கள் வரை, ஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்சவமும், அதைத் தொடர்ந்து, ஸ்ரீராமானுஜர் அவதார உற்சவமும் நடைபெறும்.