பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
அரியலூர்: ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலய தேரோட்டம் மற்றும் சுற்றுலாதுறை சார்பில், 23 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிறைவு விழா நடந்தது.அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலத்தின், 282வது ஆண்டு பெருவிழா, கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.முன்னதாக ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை கோவில் வளாகத்தில் நடந்த அரசு விழாவில், தமிழக அரசின் சுற்றுலாதுறை சார்பில், 2011-12ம் ஆண்டு மாநில அரசு நிதி உதவியுடன், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், சுற்றுலா அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சிமெண்ட் சாலை அமைத்தல், மாதா குளத்துக்கு தடுப்பு சுவர் மற்றும் படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 23.95 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, பணி நிறைவடைந்ததை, தேவாலய பங்கு தந்தை லூர்துசாமியிடம் வழங்கி, கலெக்டர் ரவிக்குமார் பேசினார்.விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனியசாமி, ஆர்.டி.ஓ., கணபதி, ஆயர் அந்தோணிசாமி பிரான்ஸிஸ், கோஸ்மான், டெரன்ஸ், அடைக்கலசாமி, சூசைராஜ், ஜோசப் பெனே, பியர், காணிக்கைராஜ், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன், அரியலூர் தாசில்தார் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.