பொள்ளாச்சி: போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் திருவீதி உலா வந்தது. மாலை 5.00 மணிக்கு தர்மராஜா கோவிலில் பச்சை போடும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.00 மணிக்கு, பூக்குண்டம் திறக்கப்பட்டது. குண்டத்தில், சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தானியங்களை இட்டு வழிபாடு செய்தனர். இரவு 9.00 மணிக்கு, சிங்க வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, குண்டம் வளர்க்கும் நிகழ்ச்சியும், வான வேடிக்கையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை 7.00 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 4.00 மணிக்கு, மாவிளக்கு எடுத்து வழிபாடு நடக்கிறது. நாளை இரட்டை கிடா வெட்டி சக்தி கும்பம் கங்கையில் விடுதலும், 26ம் தேதி மகா அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. குண்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் விழா