பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
குறிச்சி: கோவை, மதுக்கரை மரப்பாலம் அருகேயுள்ள, தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சித்திரை பெருவிழா லட்சார்ச்சனை மற்றும் விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா இன்று துவங்குகிறது. விழா இன்று மாலை 5:00 மணிக்கு, லட்சார்ச்சனையுடன் துவங்குகிறது. நாளை காலை 6:00 மணிக்கு, சிவகாமியம்மை உடனமர் சந்திரசேகரருக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. 9:00 மணிக்கு, அன்னதானத்தை, மாவட்ட எஸ்.பி., உமா துவக்கி வைக்கிறார். 10:00 மணிக்கு, விருது வழங்கும் விழாவும், மாலை 3:00 மணிக்கு, வள்ளியம்மன் கும்மி ஒயிலாட்டமும், 6:00 மணிக்கு, லட்சார்ச்சனை நிறைவு புனித நீர்த்திருக்குடங்களை மலை மேல் கொண்டு செல்லுதலும் நடக்கின்றன. 7:00 மணிக்கு, தருமலிங்கேஸ்வரர் திருமஞ்சனம் திருமுறையோதலுடன் வழிபாடு நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, விழா மற்றும் தர்மகர்த்தா குழுவினர் செய்துள்ளனர்.