பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
பல்லடம்: பல்லடம் அருகே நாரணாபுரம் பெரிய விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 28ல் துவங்குகிறது.பல்லடம், நாரணாபுரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரிய விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, தற்போது, ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் உள்ள மாகாளியம்மனுக்கு புதிதாக கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இரவு 7.00 மணிக்கு மூலமூர்த்திகள் திருக்குடங்களை இடமாக கொண்டு வேள்வி சாலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8.00 மணிக்கு முதற்கால வேள்வி, 8.30 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 9.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், எண்வகை மருந்து சாத்தல் நடக்கிறது.வரும் 29ம் தேதி திங்கள் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, காலை 8.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம். 9.00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. 9.30 மணிக்கு சிவநெறிப்பாவரசு சென்னியப்பனார் தலைமையில் விமானத்துக்கு கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.15 மணிக்கு அருளாளர் அருளுரை, 11.30 மணிக்கு பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் , 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாரணாபுரம், மாதம்புதூர் மற்றும் தெற்குபாளையம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.