அருணகிரிநாதர் திருப்புகழில், எழுகடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் என்று குறிப்பிடுகிறார். ஏழுகடல் மணலைக்கூட எண்ணி விடலாம். என் பிறப்பின் எண்ணிக்கையை எண்ணமுடியாது, என்பது இதன் பொருள். இதையே ஆண்டாளும் திருப்பாவையில், கண்ணா! நீயே ஏழேழு பிறவிக்கும் உற்றதுணை என்று குறிப்பிடுகிறாள். பிறவிக்கு எண்ணிக்கை கிடையாது. அது இடைவிடாத தொடர் சங்கிலியைப் போன்றது சமயத் தத்துவங்கள் கூறுகின்றன.