புதுச்சேரி: அக்ஷய சீரடி சாய்பாபா கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. லாஸ்பேட்டை, செவாலியர் ஸ்ரீனிவாசன் நகரில், அக்ஷய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் சம்வஸ்திரா அபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு, கணபதி ஹோமம், அக்ஷயசாய் மூலமந்திர ஹோமம் நடந்தது. சாய்பாபா விக்ரகத்துக்கு, பக்தர்கள், பால் அபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு ஆரத்தி நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.