பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில் இருந்து, சித்திரை தேரோட்டத்தின் போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்கு, பட்டு வஸ்திரம், கிளி நேற்று கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படும் மாலை தினமும், அருகே உள்ள வடபத்ரசாயிக்கு அணிவிக்கப்படுகிறது. அதே போல, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் கருடசேவையின் போதும், மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போதும், ஆண்டாள் சூடிய மாலை, பட்டு வஸ்திரம், கிளி அணிவிக்கப்படும். நேற்று, ஸ்ரீரங்கம் தேரோட்டத்திற்கு கொண்டு செல்ல, பட்டு வஸ்திரம், கிளி போன்றவை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அவற்றை, ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில், கோயில் ஊழியர்கள் மாட வீதி, ரத வீதிகளில் சுற்றி வந்து, திருச்சிக்கு காரில் கொண்டு சென்றனர். நிகழ்ச்சியில் தக்கார் ரவிசந்திரன், இணை கமிஷனர் தனபால், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.