உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவாக கொடி இறக்கம் மற்றும் மகாபிஷேகம் நேற்று நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏப்., 16 ல் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 2 ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு குட்டை திடலில், நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரசித்தனர். நேற்று கோவிலில், காலை 09:00 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 11:00 மணிக்கு மகாபிஷேகம் நடந்தது. திருவிழா நிறைவு பெறுவதால், பெண்கள் மழை வேண்டி, வளர்த்த முளைப்பாரிகளை கோவிலில் சமர்ப்பித்து, வழிபட்டனர்.