அவிநாசி: திருநாவுக்கரசு நாயனார் என்ற அப்பர் சுவாமிகளுக்கு குருபூஜை விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்தது. அப்பர் பெருமான் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு, பூஜை நடந்தது. சிவனடியார்கள், தேவாரம் பாடி, சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், அப்பர் பெருமான் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை, கொங்கு இளைஞர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.