சோழவந்தான்: சோழவந்தான் அருணாசலஈஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.அர்ச்சகர் கணபதி, நந்தீஸ்வரர், அம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களை செய்தார். அம்மன், சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோயில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில், தென்கரை திருமூலநாதர் சுவாமி கோயில்களிலும் பிரதோஷம் நடந்தது.