மத்தளம்பாறை சந்தனமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2013 10:05
தென்காசி: தென்காசியை அடுத்த மத்தளம்பாறை சந்தனமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.தென்காசியை அடுத்த மத்தளம்பாறை இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 30ம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி மாலை 108 திருவிளக்கு பூஜையும், 5ம் தேதி மதியம் அன்னதானமும், இரவு பட்டிமன்றமும் நடந்தது. 6ம் தேதி மாலை கணபதி ஹோமமும், இரவு கரகாட்ட நிகழ்ச்சியும் நடந்தது. 7ம் தேதி (நேற்று) மாலை குற்றால தீர்த்தம் எடுத்து வீதி உலா வருதலும், இரவு டிரம்ஸ் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு அர்த்தசாம பூஜையும், ஒரு மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி மற்றும் முளைப்பாரி ஊர்வலமும் நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.