பதிவு செய்த நாள்
08
மே
2013
10:05
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நாளை காலை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. விழாவில் 2ம்திருவிழா திருவாடுதுறை ஆதினம் சார்பில் சமய வளர்ச்சி மாநாடும், 72-வது தேவார பாடசாலை ஆண்டு விழாவும் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் நாளை காலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம், மறுநாள் இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இரண்டாம் நாள் விழா முதல், தொடர்ந்து நான்கு நாட்கள் திருவாடுதுறை ஆதினம் சார்பில் தாணுமாலையன் கலையரங்கத்தில் சமய வளர்ச்சி மாநாடும், 72-வது தேவாரப்பாடசாலை ஆண்டு விழாவும் நடக்கிறது. வரும் 10-ம் தேதி ஆரம்பமாகும் சமய வளர்ச்சி மாநாட்டிற்கு கல்யாண சுந்தர தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகிக்கிறார். மாலை 5-க்கு ஹரிகரன் குழுவினரின் மங்கல இசையும் , 6-க்கு தம்பையா ஓதுவாரின் திருமுறை ஓதல் இசையும் நடக்கிறது. 6.30க்கு ஆறுமுகம் வரவேற்று பேசுககிறார். மாவட்ட நீதிபதி குமரகுரு திருவிளக்கேற்றுகிறார். தொடர்ந்து அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள், சுவாமி சைத்தன்யானந்த் மகராஜ், பாலபிரஜாபதி அடிகளார், மாதாஜி பரமேஸ்வரி ஆகியோர் பேசுகின்றனர். சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ் பரிசு வழங்குகிறார். ராமசந்திரன் நன்றி கூறுகிறார். இரண்டாம் நாள் விழாவிற்கு நாராயணதாஸ் தலைமை வகிக்கிறார். சிவன்பிள்ளை வரவேற்கிறார் பட்டமுத்து,கம்பபாத சேகரன், விசுவதிலகன், ராமசாமி ஆகியோர் பேசுகின்றனர். நான்காம் நாள் விழாவிற்கு குமரன் நாயர் தலைமை வகிக்கிறார். ராமசந்திரன் வரவேற்கிறார். கோமதி திருநாவுக்கரசு, நாராயண தந்புருஷ தேசிகர், சிவன்பிள்ளை, கந்தசாமிபிள்ளை ஆகியோர் பேசுகின்றனர். 72-வது ஆண்டு சமய வளர்ச்சி மாநாடு தேவார பாடசாலை ஆண்டு விழா , திருமடகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தும் சிவனடியார்க்கு பாராட்டு விழா, ஒன்பதாம் திருமுறை ஆய்வு விரிவுரைகள் நடக்கிறது. திருவாடுதுறை ஆதின கிளை மடம் அம்பலவானகத்தம்பிரான் விழாவை துவங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை சுசீந்திரம் கிளை மடம் ஆய்வாளர் ஆறுமுகம் செய்து வருகிறார்.