பதிவு செய்த நாள்
09
மே
2013
11:05
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதம், தேர்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர் திருவிழா, ஏப்ரல், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, நேற்று, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், மாலை, திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.