Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை! மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிவாசி கோவில் விழா தேங்காய் உடைத்து குறி சொன்ன சாமியாடிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2013
11:05

பந்தலூர்: பந்தலூர்அருகே ஏலமன்னா கிராமத்தில் பனியர் இன ஆதிவாசி மக்களின் கோவில் திருவிழா நடந்தது. பந்தலூர் பகுதியில் வாழ்ந்து வரும் பனியர் இன பழங்குடி மக்கள், "குளியன், மாரி ஆகிய தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏலமன்னா கிராமத்தில் நடந்த திருவிழாவில், பந்தலூர் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். "வெளுத்தா என்பவர் சாமியாடியாகவும், அவருடன் 3 பேர் உதவியாக இருந்தனர். சிகப்பு மற்றும் கருப்பு துணியை கட்டிக்கொண்ட இவர்கள், சாமியாடும்போது பனியா மற்றும் கன்னடம் மொழிகளில் பேசினர். ஒரு ரூபாய் நாணயத்திலும், தேங்காய் வழங்கினால், அதனை வேல்கம்பினால் உடைத்தும் குறிகூறினர். தொடர்ந்து, வேண்டுதலுக்காக கொண்டுவரப்பட்ட கோழிகளை பூஜைக்கு பின்னர், தலைமை சாமியாடி கடித்து ரத்தம் குடித்து வீசியெறிந்தார். வீசிய கோழியை எடுத்து, அங்கேயே சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், ஆதிவாசி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை சி.டி.ஆர்.டி. இயக்குனர் ரங்கநாதன் தலைமையில் ஊழியர்கள், கிராமத்து மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar