திருமுருகனின் மூத்தமனைவி தெய்வானை. இளைய மனைவி வள்ளி. வள்ளிக்கு ஏற்றம் அளித்திருப்பதற்கு, அவள் முருகனின் இளையமனைவி என்பது காரணமல்ல. அவள் அதிகமாக தவம் செய்தவள். தெய்வானையை விட அதிக தவம் செய்து தபஸ்வினி என்ற சிறப்புப் பெயர் பெற்றவள். முருகனே அவளைத் தேடிச் சென்றார். ஆனால், அவள் அவரை அடைய அவளது உறவினர்களே தடையாக இருந்தனர். இந்த உறவுகளைத் தான் தீய வினைகள் என்பர். நாமும் இறைவனை அடைய நமது தீய வினைகள் தடை போடுகின்றன. இறைவனோ, நம்மை நாடிவந்து அவற்றை அகற்றி ஆட்கொள்கிறான். அதுபோல, முருகனே நேரில் வந்து வள்ளியை ஆட்கொண்டார். மேலும், தகுதியுள்ள தூய பக்தர்களை இறைவன் தானாகவே வந்து ஏற்றுக் கொள்வான்.