ஆதிசங்கரர் பாடிய பஜ கோவிந்தத்தை ஞானம் வழங்கும் அணையா தீபம் என்று போற்றுவர். வாழ்வில் உண்டாகும் மயக்கம் தீர்க்கும் மாமருந்தாக பஜகோவிந்தம் விளங்குகிறது. மனதில் ஏற்படும் தீய ஆசைகளை உடைக்கும் சம்மட்டியாக விளங்குவதால் இதற்கு, மோக முத்கரம் என்ற சிறப்பு பெயர் உண்டு. இதில் 31 பாடல்கள் உள்ளன. காலன் நம் உயிரை பறிக்க வரும்போது நாம் கற்ற கல்வியும், தேடிய செல்வமும் உதவிக்கு வராது. கோவிந்த நாமம் ஒன்றே உற்ற துணை, என்று பஜ கோவிந்தத்தின் முதல்பாடலில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.