உலகளந்த பெருமாள் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2013 10:05
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டாள் சன்னதியில் 10 ஆயிரத்து எட்டு மந்திரங்கள் கூறி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஆண்டாள் கோஷ்டியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.