பதிவு செய்த நாள்
14
மே
2013
11:05
ஈரோடு: ஈரோடு சிருங்கேரி ஸ்ரீசங்கர மடத்தின் சார்பில், ஸ்ரீசங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் விழா, ஈரோடு அக்ரஹார வீதி ஸ்ரீசங்கர மடத்தில் நடக்கிறது.
நாளை (15ம் தேதி) காலை, ஸ்ரீசங்கர ஜெயந்தி மஹோத்ஸவம், அன்னதானம், பட ஊர்வலம், சிறப்பு சொற்பொழிவு, பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சதருத்ர பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஈரோடு சிருங்கேரி ஸ்ரீசங்கர மடம், அனைத்து சமூக மஹா ஜனங்கள், சாதுர்மாஸ்ய விரத குருதரிசன கமிட்டி ஆகியோர் செய்துள்ளனர்.