பதிவு செய்த நாள்
15
மே
2013
10:05
கோவை : விளாங்குறிச்சி, வெங்கடாஜலபதி நகரிலுள்ள அருள்மிகு கற்பக விநாயகர், ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை மங்களஇசை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், கோ, தன பூஜை, தேவதா அனுக்ஞை, பிராம்மண அனுக்ஞை, யஜமான சங்கல்பம், ஷோடசமஹாகணபதி ஹோமம், ஷோடச மகாலட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், காம்யார்த்த ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை 5.00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 1.00 மணியளவில், சேரன்மாநகர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில்களிலிருந்து முலைப்பாலிகை, புனிதநீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.00மணிக்கு, முதற்கால யாகவேள்வி மற்றும் தீபாராதனை நடந்தது..நாளை காலை 9.00 மணிக்கு அருள்மிகு கற்பகவிநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன் விமான கும்பாபிஷேகம், 9.15; பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 9.25 மணிக்கு ஸ்ரீ கருமாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.