பதிவு செய்த நாள்
15
மே
2013
10:05
கேரளா நெடுங்கண்டத்தில், புதிதாக கட்டப்பட்ட சிவபார்வதி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. நெடுங்கண்டம் அருகே, பாரத்தோட்டில் சிவபார்வதி கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கேரளாவில் வாழும் தமிழர்களால் கோயில் கட்டப்பட்டுள்ளதால், கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக அங்கு பிரதிஷ்டை செய்யப்படும், சுவாமி விக்கிரகங்கள், தேனி மாவட்டத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நெடுங்கண்டம் கிருஷ்ணன் கோயிலில் இருந்து, சிவபார்வதி விக்கிரகங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம்கோ சிமேன்ட் சேர்மன் ராமசுப்ரமணியராஜா, கோவை விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் ஓ.ஆறுமுகசாமி, தேனி சித்பவா ந்த ஆசிரம தலைவர் சுவாமி ஓங்காரநந்தர், திருமூர்த்தி மலை <உலக சமாதான ஆலயத்தலைவர் பரஞ்சோதியார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.