சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் 28ல் குருபெயர்ச்சி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2013 11:05
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசாமி, விசாலாட்சி அம்மன் கோயில் குருக்கள் தங்கராஜ் கூறுகையில், "" 28ம்தேதி இரவு 9.10 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். ஆலயங்களில் நடக்கும் ஹோமங்கள், அர்ச்சனைகளில் கலந்து கொண்டு நிம்மதி, அமைதி பெறலாம். சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் 28ம்தேதி அன்று இரவு 8 மணிக்கு, விசேஷ குருபெயர்ச்சி ஹோமங்கள்,9.10 மணிக்கு அர்ச்சனை நடைபெறும், என்றார்.