ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், சுவாமி அம்பாள் சேதுமாதவர் தீர்த்தத்தில் எழுந்தருளி, வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. வைகாசி பவுர்ணமியையொட்டி, நேற்று கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்தியுடன் தங்க பல்லாக்கில் புறப்பாடாகி, கோயிலில் உள்ள, சேதுமாதவர் தீர்த்த கிணற்றில் எழுந்தருளினர். பின், சுவாமி, அம்பாளுக்கு கோயில் குருக்கள் பூஜை, மஹா தீபாரதனை செய்து, வசந்த உற்சவ நிகழ்ச்சி நடந்தது. பவுர்ணமியான இன்று, விநாயகருடன் சுவாமி, அம்பாள் சேதுமாதவர் தீர்த்தத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.