பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில், பொதுமக்கள் பங்களிப்புடன், புதிதாக திரவுபதி அம்மன் சமேத ஸ்ரீதர்மராஜர் கோவில் கட்டப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 22ம் தேதி கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கோபூஜை, முதல்கால யாக பூஜை, பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம் பிம்ப சுத்தி, கலாகர்ஷனம், கோபுர கலச பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை யாகசாலை, விசேஷ பூஜை, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கலச புறப்பாடு, ஆலய பிரதட்சணம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.