பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் பரஞ்சோதி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது. விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், அம்மனுக்கு சீர் தட்டு மற்றும் அணிக்கூடை எடுத்து வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம், கரகம் திருவீதியுலா, பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், "அம்மன் அருள் என்ற தலைப்பில் பேராசிரியர் சூரியநாராயணன் பேசினார். முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலமும் நடந்தன. விழாவையொட்டி இன்னிசை, பஜனை, பரதநாட்டியம், ஓயிலாட்டம், பக்தி பாடல் இசை நிகழ்ச்சி, ஜமாப், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.