விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி, கருடசேவை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர், ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவில் பிரமோற்சவ விழா, 21ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. 23ம் தேதி, காலை லட்சுமி நாராயணர் திருக்கோலத்தில் பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில், கருடசேவை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 25ம் தேதி, காலை பட்டாபிராமர் திருக்கோலத்தில் பல்லக்கிலும், இரவு சேஷ வாகனத்தில் பெரிய பெருமாள் உபயநாச்சியாருடன் பரமபதநாதன் திருக்கோலத்தில் வீதியுலா நடந்தது.