திருபுவனை: திருபுவனை பழண்டிமாரியம்மன் கோவிலில் 45 அடி உயர ராஜ கோபுரம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. திருபுவனை கிராமத்தில் பழண்டிமாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் கோபுரம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கட்டடம் வலுவிழந்தது. இதையடுத்து, புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி துவங்கியது. கோவிலுக்கு 45 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கோவில் வளாகத்தில் மூலஸ்தான கோபுரம் மற்றும் மண்டபம் கட்டும் பணி துவங்க உள்ளது. திருப்பணியை கோவில் சிறப்பு அதிகாரி ஆசிரியர் ராஜா மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.