ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் கெஜிலிட்டி தர்க்காவில், 109ம் ஆண்டு சந்தனகுட உருஸ் விழா, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 26ம் தேதி மாலை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 27ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, சந்தன குட தர்கா செரீஃப் வந்தடைந்தது. 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, குரான் படித்து, சந்தனகுட விழாவை கொண்டாடினர். பவானிசாகர் எம்.எல்ஏ., சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்வம், மற்றும் சத்தி நகராட்சி கவுன்சிலர் பாசில் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்கா கமிட்டி தலைவர் அப்துல்மஜீத் மற்றும் தர்கா கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.