சபரிமலையில் சேவை புரிந்த தொண்டர்களுக்கு சான்றிதழ்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2013 10:06
புதுச்சேரி: சபரிமலையில் சேவை புரிந்த அய்யப்ப தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சிறப்புக் கூட்டம் சாய்ராம் ஓட்டலில் நடந்தது. சங்கத்தின் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.மாவட்டத் தலைவர் அறிவாசகம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலத் தலைவர் விசுவநாதன், செயலாளர் ஐய்யப்பன், பொருளாளர் கருப்பன் வாழ்த்திப் பேசினர். கவுரவத் தலைவர் வாசுதேவன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநில தொண் டர் படை முதன்மை தலைவர் ஜெகதீஷ், சபரிமலையில் சேவை புரிந்த தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கூட்டத்தில், இந்தாண்டு அய்யப்பன் கோவிலுக்கு அதிக அளவில் தொண்டர் படை அனுப்பி சேவை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவர்னரின் தனிச் செயலர் சீனுவாசன், சங்க இணை செயலா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் நந்தகோபாலன் நன்றி கூறினார்.