பதிவு செய்த நாள்
03
ஜூன்
2013
10:06
புதுடில்லி: வைஷ்ணவி தேவி மலைக் கோவிலுக்கு, அடுத்த மாதம் முதல், ரயில் சேவை துவக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புகழ் பெற்ற ஸ்ரீ வைஷ்ணவி தேவி மலைக் கோவிலிக்கு, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள், புனித யாத்திரை செல்வது வழக்கம். எனினும், மலை உச்சியில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல, ஏராளமான குகைகள் மற்றும் பாலங்களை கடந்து செல்ல வேண்டிய ‹ழ்நிலை உள்ளது. இதனால், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உத்தம்பூர் - கதரா இடையே, 25 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்த சிரமமும் இன்றி, பக்தர்கள் மலைக் கோவிலை சென்றடையலாம். தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்லும் ரயில்கள், உத்தம்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், 25 கி.மீ., மலைப் பாதையை பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய ‹ழல் நிலவுகிறது. உத்தம்பூர் - கதரா ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தவுடன், சோதனை ஓட்டத்திற்குப் பின், இப்பாதையில், அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என, ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில், ஏழு குகைகள் மற்றும் சிறிதும் பெரிதுமாக, 30 பாலங்கள் உள்ளன. இவற்றின் வழியாக, 25 கி.மீ., பயணத்தின் மூலம் மலைக் கோவிலை அடையலாம். டில்லி, சண்டிகர், அகமதாபாத் உள்ளிட்ட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உத்தம்பூர் வரை இயக்கப்படும் ரயில்கள், கதரா வரை நீட்டிக்கப்படும் என, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.