பதிவு செய்த நாள்
03
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், மிகவும் பழமையானது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பரமேச்சுர விண்ணகரம், அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோற்சவம், இன்று காலை, 5:30 மணி முதல், 6:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு சிம்ம வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
2 ஹம்ச வாகனம் சூரிய பிரபை
3 கருடசேவை ஹனுமந்த வாகனம்
4 சேஷ வாகனம் சந்திரபிரபை
5 மோகினி அவதாரம் யாளி வாகனம்
6 சப்பரம் யானை வாகனம்
7 திருத்தேர் உற்சவம்
8 திருப்பல்லக்கு குதிரை வாகனம்
9 தீர்த்தவாரி ஆள்மேல் புண்ணியகோடி பல்லக்கு விமானம்
10 சாந்தி திருமஞ்சனம் சப்தாவரணம்
11 விடையாற்றி உற்சவம் முதல் நாள்
12 விடையாற்றி உற்சவம் இரண்டாம் நாள்
13 புஷ்ப பல்லக்கு