ராஜபாளையம்: ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு, ராஜபாளையம் மாயூநாதசுவாமி கோயில், சுவாமி மற்றும் அம்மன் தேர் சுத்தம் செய்யும் சீரமைப்பு பணி நடந்தது.ஆனிதேரோட்டத்திற்கான கொடியேற்றம் ஜூன் 14ல் நடக்க உள்ளது. பத்து நாள் நடைபெறும் விழாவில், சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா நடைபெறும். மண்டகப்படி அமைத்து வழிபாடு நடக்கும். ஏழாம் நாளான 21ல் திருக்கல்யாணம், 22 காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, நேற்று காலை தேரை சுத்தம் செய்யும் பணியை, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் செய்தனர். மன்ற தலைவர் ராமராஜூ, கோயில் நிர்வாக அதிகாரி வேல்முருகன் ப்ஙகேற்றனர்.