பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
11:06
திருக்கழுக்குன்றம்: திருவானைகோவில், திருவாலீஸ்வரர் கோவிலை பராமரித்து, கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்விளைந்தகளத்தூர் அருகே, திருவானைகோவிலில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது.தல அமைப்புகருவறையில் கிழக்கு நோக்கி திருவாலீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மன் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். 12 தூண்கள் கொண்ட அர்த்தமண்டபம் உள்ளது. இதில், முருகன், வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கோவில், கருங்கற்களால், 5 மாடங்களில், அழகிய சிற்பங்களை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.கோவில் ”ற்றுச்சுவரில், விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தெற்கு நோக்கியும், மகாவிஷ்ணு மேற்கு நோக்கியும், பிரம்மா சண்டிகேஸ்வரர் வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். ஐம்பொன்களால் ஆன உற்சவர் சிலையும் உள்ளது. கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.சீர்குலைவுபல்வேறு சிறப்புக்களை கொண்ட தொன்மைவாய்ந்த இக்கோவிலின் ”ற்றுச்சுவர்கள் இடிந்தும், கோவில் மேல் பகுதியில் செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 60 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாத இக்கோவிலை பராமரித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இக்கோவில், தர்மகர்த்தா பராமரிப்பில் உள்ளது. கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.