பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
தர்மபுரி: தர்மபுரி, காமாட்சியம்மன் தெரு ஸ்ரீ மேட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும், 12ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, நேற்று காலை, 9 மணிக்கு காவிரியில் இருந்து நீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (ஜூன் 9) ஸ்வாமி உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி காலை, 9 மணிக்கு விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனையும், மாலை, 6 மணிக்கு முதல் கால யாகபூஜையும் நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 8 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மாலை, 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும, இரவு, 7 மணிக்கு அஷ்டபந்த மருந்து சாத்துதலும், இரவு, 8 மணிக்கு நாடி சந்தானம், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை, 7 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், 9.15 மணிக்கு கலச புறப்பாடும், 9.30 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு மேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவ ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் தலைமையில் சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். 10 மணிக்கு மஹா அபிஷேகமும், 10.30 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணமும், மஹா தீபாராதனையும், 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.