நிலக்கோட்டை: பிள்ளையார்நத்தத்தில் மட்டப்பாறை ஆளு குட்டலுவார் பங்காளிகளுக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி, நாலுகு தங்காள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கும்ப ஆராதனம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்வுகள் விநாயகர் பூஜையுடன் நடந்தது. காலை 7.00 மணிக்கு வெங்கடாஜலபதி, நாலுகுதங்காள் கோயில் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிறந்த வீட்டு பெண்களுக்கு வீடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்காளிகள், உறவினர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. மதுரை அழகர் கோயில் அர்ச்சகர் சுந்தரநாராயணன் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.