திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த புலிகரம்பலூரில் 53 ஆண்டுகளுக்கு பின் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ராமநத்தம் அடுத்த புலிகரம்பலூரில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடந்தது. ஊராட்சி தலைவர் இந்திராகுமாரி ராஜேந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேர், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. 53ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.