பதிவு செய்த நாள்
15
ஜூன்
2013
11:06
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, அமர்நாத் பனி லிங்கம், யாத்ரீகர்களின் பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே, உருகத் தொடங்கியுள்ளது. இது, புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
புனித பயணம் : இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் அமர்நாத்தில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிப்பதற்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். வழக்கம் போல், இந்த ஆண்டும், அமர்நாத்தில், சில தினங்களுக்கு முன், இயற்கை பனி லிங்கம் உருவானது. இம்மாதம், 28 முதல், அடுத்த மாதம், 21ம் தேதி வரை பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாத்திரை தொடங்க, இரு வாரங்களே உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பனி லிங்கம் உருகத் தொடங்கியுள்ளது.
40 சதவீதம்: தற்போதைய நிலவரத்தின் படி, 40 சதவீத பனி லிங்கம் உருகிவிட்டதாக, செசதிகள் வெளியாகியுள்ளன. எனினும், ஓரிரு தினங்களில் மாநிலத்தில் வெப்பத்தின் அளவு குறையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெப்ப நிலை குறைந்தால், பனி லிங்கம் மீண்டும் முழுமை பெற வாசப்பு இருப்பதாக, அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.