Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உருவாகும் முன்பாகவே உருக துவங்கிய ... ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி! ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விரதம் இருக்கிறீர்களா? இதப்படிங்க முதல்ல...!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
03:06

கடவுளுக்காக விரதம் இருக்கிறவங்களும், உடல் எடையை குறைக்கணும்ன்னு விரதம் இருக்கிறவங்களும் பட்டினி கிடந்தாலோ, குறைவா சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும்ன்னு நினைக்கின்றனரே தவிர, கலோரி குறைவான உணவை சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்கிறதில்லை. சாப்பாடு மூலமா பாசத்தைக்காட்ட நினைக்கிற மக்கள் இந்தியாவில் அதிகம். கல்யாணம், காதுகுத்தல்ன்னு எந்த விசேஷமானாலும் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். விரதங்கிறது வெறுமனே சாப்பாட்டை தவிர்க்கிற விஷயம் இல்லை. வயிறோடு சேர்த்து மனஉணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்கிறது தான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம்ன்னு சொல்லி,வெளி வேலைகளை வச்சுக்கிட்டுஅலையறது மற்றும் டிவிபார்க்கிறது மாதிரியான வேலைகளைச் செய்யறது ரொம்ப தப்பு. அதுஎதிர் மறையான பலன்களைத்தான் தரும்.

விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரை கலந்தாலோசித்து, உடல்நலத்தை பரிசோதித்த பிறகு, எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதை தெரிந்து, விரதம் ஆரம்பிப்பதே சரியானது. வாரத்துல ஆறு நாள் கண்டதையும் சாப்பிடறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுக்கிறதால, விரதங்கிறது ரொம்ப நல்ல விஷயம். உடம்புல உள்ள கழிவுகள்,நச் ப் பொருட்கள் வெளியேறஇது உதவும். ஹெச்.டி.எல் என்ற நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும்,யார் விரதம் இருக்கலாம்,யாருக்கு அது கூடாதுன்னு சில வரைமுறைகள் இருக்கு. அதன் படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளோர் விரதம் இருக்கக் கூடாது. விரதம் என்றால், காலையில் இருந்து ராத்திரி வரை ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுன்னு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிறதால, காலையில் எனர்ஜி அளவுகம்மியா இருக்கும்.

காலையில் எதுவும் சாப்பிடாம விரதத்தை தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கனவே வேற ஏதாவது சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு, இதனால், இன்னும் பிரச்னை அதிகமாகும். விரதமிருக்கிறதுன்னு முடிவு பண்றவங்க, காலை உணவை தவிர்க்கவே கூடாது. காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறதால், ராத்திரிஅதிகமா சாப்பிடுவோம் நம்மையும் அறியாமலேயே. எடையைகுறைக்கணும்ன்னு விரதம் இருக்கிறவங்களுக்கு இது நேரெதிராவேலை செய்து, உடல் எடையை கூட்டும். அதனால், உயரத்துக்கேற்றஎடை, ஆரோக்கியம், சரி விகித சாப்பாடு, உடற்பயிற்சி,யோகா செய்யறவங்க மட்டுந்தான் விரதம் இருக்க தகுதியானவங்க. விரதத்தை முடிக்கிற போது,நாள் முழுக்க பட்டினி இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, ஒரு பிடி பிடிக்கிறது தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு, அப்புறமா வழக்கம் போல சாப்பிடலாம். தினசரி பயன்படுத்துகிற, டூவீலரோ, காரோ மக்கர் செய்யாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித்தான். இயக்கத்தை சுத்தம் செய்து, ஓய்வு கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு விரதம் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar