முள்ளிப்பள்ளம்: சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோயிலில், கோபுர கலசம் சாய்ந்த நிலையில் உள்ளதை சீரமைக்க வேண்டும். இக்கோயில் 13ம் நூற்றாண்டு வல்லபபாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. ஜெயலட்சுமி, விஜயலட்சுமி தேவியருடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். அறநிலையத்துறை சார்பில், இக்கோயிலில் ஒரு கால பூஜை நடக்கிறது. இதற்கிடையே, கோபுர கலசம் சாய்ந்திருப்பதும், சுதைகள் சிதைந்தும் இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. விரைவில், இக்கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.